எங்கே போகிறோம்?


சற்று சிந்தியுங்கள்.,
நாம் எங்கேபோகிறோம்?
உலகத்தில் அழிந்த மொழிகளின் 

பட்டியலில் தமிழ்மொழியினையும் இணைப்பதற்குப்போகின்றோமா?
அல்லது தமிழிலிருந்து
மலையாளம்,தெலுங்கு,கன்னடம்
போன்ற மொழிகள் உருவானது 

போல புது மொழி ஒன்றை உருவாக்குவதற்காகப்போகின்றோமா?நாம் தமிழர் எனச்சொல்லும் நம்மில் எத்தனைபேர் தமிழர்களுடன் 
உரையாடும்போது தமிழில் உரையாடுகின்றோம். 
ஏன்முடியவில்லைஇதில் என்ன சிக்கல்? நீங்கள் தமிழில் உரையாடுவதனை சகதமிழனால் புரிந்து கொள்ளமுடியவில்லையா?அப்படிஎன்றால் 
சொல்லிக்கொடுங்கள் உங்களிற்கு தமிழ்ச்சொல் 
தெரியவில்லையா?கண்டுபிடியுங்கள்,அதற்காக 
ஒன்றையும்புதிதாககண்டுபிடிக்கசொல்லவில்லை
உள்ளவற்றைத்தேடுங்கள்.இது ஒருபுறமிருக்கட்டும்.
ஒரு சாரார் தமிழில் பேசுவதையே தரக்குறைவாக 
எண்ணுகிறார்கள் இது என்ன புதுவிதமான தாழ்வு 
மனப்பான்பு புரியவில்லை.ஏன் புலம்பெயர் 
தமிழர்கள்கூட தாம்வாழும்நாட்டு மொழிச்சொற்களை 
கலத்து கதைத்தால்தான் பெருமைஎன 
எண்ணுகிறதன்மைகூட காணப்படுகிறது இதுஎன்ன 
புதுமை தன் மொழியை தானே புதைகுழியில்தள்ளும் 
துரோகமன்றி வேறென்ன? இவ்வாறு பேசுபவரை 
அறிவாளி என முடிவேடுக்கலாமா அல்லது 
நாகரிகமானவர்கள் என எண்ணுவதா? தனதாய் 
மொழியினைக்கூட சரளமாக பேசத்தெரியாத
முட்டாள்என முடிவெடுக்கலாமா
இது ஒருபுறமிருக்க தமிழில் கதைத்தால்,
நீங்கள் சுத்த தமிழில் தான் கதைப்பீர்களா?
எனக்கேளியாகக்கேட்பார்கள்.இதில் என்ன இருக்கு 
தமிழ் என்பது ஒரு மொழிதானே இதில் என்ன 
சுத்தம்,அசுத்தம் தமிழின் உட்பிரிவுகளா என்ன
முடிந்த அளவிற்கு தமிழ் மொழியை சிதைக்காமல் 
பாதுகாப்போம்.